சி.வி.சண்முகம் எம்.பி. மீது மேலும் ஒரு வழக்கு

சி.வி.சண்முகம் எம்.பி. மீது மேலும் ஒரு வழக்கு

முன்னாள் அமைச்சர் சி. வி சண்முகம்

முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி. வி சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் கடைவீதியில் கடந்த 16.9.2023 அன்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சி யின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மு கம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதி பதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக ஏற்கனவே சி.வி.சண்முகம் எம்.பி. மீது 6 வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் தற்போது 7-வதாக மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story