சைபர் கிரைம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

சைபர் கிரைம் மற்றும்  போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
விழிப்புணர்வு நிகழ்ச்சி 
பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், மற்றும் அனைத்து மக்கள் சக்தி இயக்கம் சார்பில் சைபர் கிரைம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் & போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்குழு மற்றும் அனைத்து மக்கள் சக்தி இயக்கம் இணைந்து நடத்திய சைபர் கிரைம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்சியானது, காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் ச.சக்தி தலைமை உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார்.

செம்மஞ்சேரி சரகம், காவல்துறை உதவி ஆணையர் R.வைஷ்ணவி சிறப்புரையாற்றினார். பெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் ப.சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் Dr.கலைமகன் S.வெங்கடேசன் கருத்துரை வழங்கினார். அதனை தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை சென்றடையும் விதத்தில், சைபர் கிரைம் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியானது கல்லூரியில் துவங்கி செம்மஞ்சேரி நுழைவு வாயில் வரை நடைபெற்றது.

அதனையடுத்து, பேரணி மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு பொட்டலங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் மகளிர் அணியின் கீதா கலைமகன், செம்மஞ்சேரி பெரும்பாக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் திவ்யா, பிரியா, மைதிலி, இந்திராணியம்மா, பானுமதி செம்மஞ்சேரி செயல் தலைவர் லட்சுமணன் சிங்கம், மாணவரணியின் ராகவன், தேவராஜ், ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story