இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

இணையவழி குற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

இணையதளக் குற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேராவூரணியில் மாரத்தான் போட்டி நடந்தது.  

இணையதளக் குற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேராவூரணியில் மாரத்தான் போட்டி நடந்தது.

தமிழ்நாடு இணையதளக் குற்றப்பிரிவு காவல்துறை, தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் இணைந்து இணையதளக் குற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேராவூரணியில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

பேராவூரணி காவல் நிலையத்தில் தொடங்கி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்ற மாரத்தானை தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திக் தொடங்கி வைத்தார். பேராவூரணி காவல் துறை காவேரி சங்கர், இணையதளக் குற்றப்பிரிவு தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணையதளக் குற்றம் மூலம் பொதுமக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் , குற்றம் தொடர்பாக எப்படி புகார் அளிப்பது என பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி குழு ஆய்வாளர் சீனிவாசன் , பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் , சமூக ஆர்வலர் ஹரிஹரன் , அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பேராவூரணி ஒன்றிய தலைவர் அரும்புலிஷ்வரன், ஒன்றிய துணை செயலாளர் நீலகண்டன், நகர தலைவர் தினேஷ்குமார் , நகர செயலாளர் விக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாரத்தானில் பங்கேற்ற அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

Tags

Next Story