பெண்களுக்கான இணையவழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்களுக்கான இணைய வழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இந்திய அரசாங்கம் உள்துறை அமைச்சகத்தின் இணையவழி குற்ற விழிப்புணர்வு நாளையொட்டி பெண்களுக்கான இணையவழி குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறையின் இணையவழி குற்ற தன்னார்வலர் மணிராம் கலந்து கொண்டு, பெண்கள் மத்தியில் இணையவழி குற்றங்கள் எப்படி நடக்கிறது. அதில் இருந்து நம்மை எவ்வாறு தற்காத்து கொள்ளலாம். மாணவிகள் இணையத்தை எவ்வாறு பாதுகாப்பான முறையில் கையாளலாம் என்பதை விளக்கிக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குமரேசன் நன்றி கூறினார்.இதற்கான ஏற்பாடுகளை ஆங்கில பேராசிரியர் சரவணன் செய்திருந்தார்.
Tags
Next Story