நாமக்கல்லில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல்லில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி

சைபர் கிரைம் குறித்த புகாருக்கு 1930 ஐ தொடர்புக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாமக்கல்லில் சைபர் கிரைம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை எஸ்.பி ராஜேஷ்கண்ணன் தொடங்கி வைத்தார். சைபர் கிரைம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையம் சார்பில் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியானது நாமக்கல் நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு முன்பின் தெரியாத நபர்களுக்கு ஓடிபி எண், வங்கி விபரம், லிங் போன்ற தகவல்களை கூறக்கூடாது, சைபர் கிரைம் குறித்த புகாருக்கு 1930 ஐ தொடர்புக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு பதாகை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில் நாமக்கல் டி.எஸ்.பி தனராசு, தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story