விழுப்புரத்தில் சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சைபர்கிரைம் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், டெக் னிக்கல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் கலந்துகொண்ட விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வு ஏற் படுத்தினர். மேலும் சைபர் குற்றங்கள் பற்றி புகார் தெரிவிக்க வேண்டுமெனில் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டது. விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்குமுனை சந்திப்பு அருகில் முடிவடைந்தது.

Tags

Next Story