தஞ்சையில் பெண்களுக்கான இணையவழி பாதுகாப்பு கருத்தரங்கம்
இணையவழி கருத்தரங்கம்
தஞ்சையில் பெண்களுக்கான இணையவழி பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
தஞ்சாவூர், தீர்க்க சுமங்கலி மஹாலில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய இணையப் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சிலிங் சார்பில், பெண்களுக்கான இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கருத்தரங்கில், பெண்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது அதில் உள்ள நன்மைகள், தீமைகள் பற்றியும் இணையதளத்தை எவ்வாறு பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றியும் விளக்கப்பட்டது. இக்கருத்தங்கில் சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
Next Story