அரசு பேருந்து மோதிய விபத்தில் சைக்கிளில் சென்றவர் பலி

அரசு பேருந்து மோதிய விபத்தில் சைக்கிளில் சென்றவர் பலி

அரசு பேருந்து மோதிய விபத்தில் சைக்கிளில் சென்றவர் பலி

அரசு பேருந்து முன்னே சென்ற சைக்கிளின்மீது மோதியதில் ஒருவர் பலி. மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு அரசு பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல ஆத்துகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம்.65. இவர் சீர்காழியில் உள்ள பிரபல மளிகை கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து தனது சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சாலை ஓரத்தில் சைக்கிளை ஓட்டிச் செல்லும்போது ஆத்துக்குடி மெயின் ரோடு பகுதியில் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்து முன்னே சென்ற சைக்கிளின்மீது மோதியதில் தூக்கி எறியப்பட்ட ராமானுஜம் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இப்பகுதியில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் தொடர் விபத்துகள் ஏற்படுவதாக கூறி ஸ்பீடு பிரேக்கள் மற்றும் பேரிகார்ட் அமைக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி- மயிலாடுதுறை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாகனங்களில் வேகத்தை தடுக்கும் வகையில் பேரிகார்டுகளை உடனடியாக அமைத்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அரசு பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story