குமாரபாளையத்தில் தி. மு.க. சார்பில் ஐம்பெரும் விழா

குமாரபாளையத்தில் தி. மு.க. சார்பில் ஐம்பெரும் விழா

குமாரபாளையம் 13வது வார்டு தி.மு.க. சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது


குமாரபாளையம் 13வது வார்டு தி.மு.க. சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 13வது வார்டு தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தங்கப்பதக்கம், ஸ்கூல் பேக் வழங்கும் விழா, ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கும் விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. வார்டு செயலரும், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளருமான மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவரும், வடக்கு நகர செயலருமான விஜய்கண்ணன் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு தங்கப்பதக்கம், ஸ்கூல் பேக், கல்வி கட்டணம், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன், வார்டு அவைத்தலைவர் ஆறுமுகம், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story