தச்சாம்பாடி நுகர்பொருள் கிடங்கை நுகர்பொருள் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
கிடங்கை ஆய்வு செய்த அலுவலர்
தச்சாம்பாடிநுகர் பொருள் வாணிப கிடங்கை மாவட்ட வழங்கள் மற்றும் நுகர் பொருள் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு தாலுக்கா தச்சம்பாடி ஊராட்சியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் உணவுப்பொருட்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் பொருள் பாதுகாப்பு அலுவலர் அலுவலர் ராமச்சந்திரன்ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள தச்சம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் இன்று மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் பதிவேடுகளை ஆய்வு செய்து உணவுப் பொருட்கள் மழையில் சேதம் அடையாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தாலுகாவில் உள்ள அனைத்து விநியோக கடைகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது வட்ட வழங்கல் அலுவலர் சுமதி வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் உடன் இருந்தனர்.
Tags
Next Story