ஐயப்ப பக்தர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு தொடக்கம்

ஐயப்ப பக்தர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு தொடக்கம்
X
அன்னதானம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வரும் ஜன.14-ம் தேதி வரை தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் கிளைகள் சார்பில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதிரில், காவலர் குடியிருப்பு அருகில் உள்ள தான்தோன்றி மாரியம்மன் கோயில் வளாகத்தில், நேற்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வை ஒருங்கிணைப்பாளர்களாக பி. பொன்னையா, கே.கண்ணப்பன், டி.எஸ். ராஜேந்திரன், ஆர்.கே.சுப்பையன் ஆகியோர் செயல்பட்டனர். இதில் கோயில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் பால. நவநீதகிருஷ்ணன், கோயில் சிவாச்சாரியார் சீனிவாசன், கிளை நிர்வாகி எஸ்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேருந்துகள், வேன்களில் வருகை தந்த ஐயப்ப பக்தர்கள் சுமார் 500 பேருக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜன.14ம் தேதி வரை தினமும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story