அதிமுக சார்பில் கடை வியாபாரிகளுக்கு தினசரி காலண்டர்

அதிமுக சார்பில் கடை வியாபாரிகளுக்கு தினசரி காலண்டர்
அதிமுக சார்பில் கடை வியாபாரிகளுக்கு தினசரி காலண்டர்
புத்தாண்டை வரவேற்கும் விதமாக மதுராந்தகம் தொகுதி அதிமுகவினர் சார்ப்பில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தினசரி காலெண்டர்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகர பகுதியில் உள்ள அனைத்து கடை வியாபாரிகளுக்கு பொதுமக்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு மரக்கன்றுகள் மற்றும் 2024 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இவர்களுடைய புகைப்படம் பதித்த தினசரி காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு மதுராந்தகம் நகர் வீதியில் உள்ள அனைத்து கடை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் தினசரி காலண்டர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம் பி. சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story