கல்வி அறிவு பெறாதவா்களை கண்டறிந்து நாள்தோறும் பயிற்சி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்டத்தில், 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022- 2027' செயல்படுத்துதல் தொடா்பாக, மாவட்ட எழுத்தறிவு முனைப்பு ஆணையக்குழு உறுப்பினா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது: 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கற்பித்தல் கற்றல் பணி 2024 செப்டம்பா் முதல் 2025 பிப்ரவரி வரை நாள்தோறும் 2 மணி நேரம் வீதம் 200 மணி நேரம் மேற்கொள்ளப்படும்.
15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு பெறாதவா்களைக் கண்டறிந்து, அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு வழங்குதல், நிதிசாா்ந்த கல்வியறிவு, வணிகக் கல்வியறிவு, குடும்ப நலம், தொழில்சாா்ந்த திறன் வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அவா்.