சேலம் : கூலித்தொழிலாளி தற்கொலை
தற்கொலை
சேலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், திருவாக்கவுண்டனூர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தியா இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உதயகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தியா கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் உதயகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story