முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்ட அணை - போக்குவரத்து துண்டிப்பு

முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்ட அணை - போக்குவரத்து துண்டிப்பு

பாதை துண்டிப்பு 

பேச்சிப்பாறை அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறந்ததால் மண்பாதை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறந்து விடும் போது, அணையின் கீழ் பகுதியில் உள்ள பாழாறு வழியாக தண்ணீர் பாய்ந்து செல்லும். தண்ணீர் பாயும் போது பேச்சிப்பாறை சீரோபாயின்ட் ரோடு தண்ணீரில் மூழ்கும் நிலை இருந்து வந்தது. இதனால் மக்கள் பரிதவித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தண்ணீரால் ரோடு பாதிக்காத அளவில் பாலம் கட்டப்பட்டது. அதே வேளை முறையாக திட்டமிட்டு பாலம் கட்டப்படாததால்,தண்ணீர் திறக்கும் நேரங்களில் தண்ணீரால் பாலத்தின் ஒரு பகுதி சேதமாகும் நிலை ஏற்பட்டது. இதனால் பாலத்தின் நீளத்தை அதிகப்ப டுத்தும் பணி தற்போது நடக்கிறது.இதற்காக பாலத்தின் ஒரு பகுதி நீரோட்டை துண்டித்து பில்லர் அமைக்கபணிகள் நடக்கிறது.

இதனால் கோதையாறு, குற்றியாறு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் திற்பரப்பு, கடையால் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது. இலகு ரக வாகனங்கள் செல்ல பாலத்தின் கீழ் பகுதியில் மண்ணால் தற் காலிக பாதை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு பேச்சிபாறை அணையில் தண்ணீர் திறந்தபோது பாதை நீரில் மூழ்கியது. இதனால் மக்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மண் பாதை தண்ணீரில் முழுமையாக சேதமடையும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி அணை நீர் திறக்கப் பட்டு, பாதை துண்டிக்க பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர்.

Tags

Next Story