தக்கலை அருகே டிப்பர் லாரியில் இருந்து சாலையில் விழுந்த கற்களால் பாதிப்பு

தக்கலை அருகே டிப்பர் லாரியில் இருந்து சாலையில் விழுந்த கற்களால் பாதிப்பு

சாலையில் கொட்டிய ஜல்லி கற்கள்

தக்கலை அருகே டிப்பர் லாரியில் இருந்து கற்கள் மற்றும் மண் சாலையில் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளகினர்.

நாகர்கோவில் பகுதியில் இருந்து டாரஸ் லாரி ஒன்று ஆழ்வார்கோவில் பகுதியில் நடக்கும் நான்கு வழிச்சாலை பணிக்காக சிறிய கற்கள், மண் போன்றவற்றை எற்றிவந்து கொண்டிருந்தது.இந்த லாரி தக்கலை - இரணியல் சாலையில் செல்லும் போது திடீரென லாரி டிப்பரின் கதவு திறந்தது.

இதனால் லாரியில் இருந்த மண், கற்கள் சாலையில் கொட்டியது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கதவு திறந்த போது லாரியின் பின்னால் இருசக்கரவாகனத்தில் யாரும் பயணிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட் டது.

இருப்பினும் சாலை முழவதும் கல், மண் குவியல் காணப்பட்டதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அப்பகுதி பொதுமக்கள் அவற்றை அப்புறப்படுத் தியதால் போக்குவரத்து சீரானது.

Tags

Next Story