எடப்பாடி அருகே வைக்கோல் போர் தீ விபத்தால் சேதம்

எடப்பாடி அருகே வைக்கோல் போர் தீ விபத்தால் சேதம்

தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்

எடப்பாடி அருகே வைக்கோல் போர் தீ விபத்தால் சேதம் அடைந்தது.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட, வெள்ளரி வெள்ளி கிராமம், கொடைக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (55) விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். அங்கு கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல், காய்ந்த புற்கள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் குவியலாக சேர்த்து வைத்துள்ளார்.

இந்நிலையில் பகல் நேரத்தில் திடீரென அங்கு வைக்கப்பட்டு இருந்த கால்நடை தீவனக் குவியலில் தீ பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் தீ மளமள வென பரவி, கொழுந்து விட்டு எறிந்த நிலையில், தீயை அணைக்க போராடிய அக்கம் பக்கத்தினர். தீயின் வேகம் அதிகரித்ததால்,

இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்குள் பெருமளவிலான கால்நடை தீவனம் தீயில் எரிந்து சாம்பலானது.

இந்த விபத்தானது அந்தப் பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து தீப்பொறி விழுந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், விபத்து குறித்து பூலாம்பட்டி போலீஸார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர்...

Tags

Next Story