950 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: அதிகாரிகள் நேரில் ஆய்வு
நீரில் மூழ்கிய நெற்பயிர்
வடகிழக்கு பருவமழை மற்றும் மிக் ஜாம் புயல் காரணமாக திவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால், ஆரணி, மேற்கு ஆரணி வட்டத்தில் சம்பா பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த, நெற்பயிர்களான குண்டு. ஆர்என்ஆர், மகேந்திரா, கோ 51 உள்ளிட்ட ரகங்களில் பல நுற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது.
தொடர் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்களை அறு வடை செய்ய முடியாமல் போனது. இதனால், ஆரணி அடுத்த ஆதனூர், எஸ்.வி.நகரம், இரும் பேடு, சங்கீதவாடி, லாடவரம், சென்னாத்தூர் லாடவரம், பனையூர், முள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த பல நூற்றுக்கணக் கான ஏக்கர் நெற்பயிர் கள் மழைநீரில் மூழ்கி, நிலத்திலேயே நெற்கதிர் கள் முளைத்து நாற்றாக வளர்ந்து சேதமடைந்தது. மேலும், ஆரணி, மேற்கு ஆரணி வட்டாரத் தில் தொடர் மழையால் நீரில் மூழ்கி உள்ள நெற்பயிர்கள் சேதமடைந்துள்ள பயிர்கள் குறித்து விவசாயிகள் வருவாய்துறை, வேளாண்துறை அதிகாரி கள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி கள் கோரிக்கை வைத்தி ருந்தனர்.
இதுகுறித்து, ஆரணி பகுதியில் புயல் மற்றும் மழையால் நெற்பயிர்கள், வேர்கடலை பயிர்கள் சேதமடைந்தது குறித்து, இதையடுத்து தாசில்தார் மஞ்சுளா, வேளாண் அலுவலர்கள் பவித்ராதேவி,கீதாராணி, ஆர்ஜகள் பிரமிளா, மணி மாறன் மற்றும் வருவாய்துறை, வேளாண்மைதுறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம், அக்ராபாளையம், முள்ளிப்பட்டு, மட்டதாரி, வெள்ளேரி, ஆதனூர், இரும்பேடு, அடையபுலம், ராட்டினமங்கலம், குன் னத்தூர் மற்றும் பாளை யம் ஆகிய கிராமங்களில் மிக்ஜாம் புயலால் சேதம டைந்த வேர்கடலை, நெற்பயிர்களை வயல்வெளிகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து, வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பயிர் சேதங்களை கணக்கீடும் பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில், முதற்கட்டமாக ஆரணி, மேற்கு ஆரணி பகுதிகளில் சுமார் 950 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழுகி சேதமடைந்துள்ளகாவும், மீதமுள்ள, விடுபட்டவைகள், கணக் கீடு செய்து பணிகளில் வேளாண்மை அலுவலர் கள், ஆர்ஐ, விஏஓக்கள் மூலம் அந்த கிராமங்களில் தொடர்ந்து சேதம் குறித்து கூட்டு தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் பயிர்சேதங்கள் முழுமையாக கணக்கீடு செய்து முடித்தவுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.