கனமழையால் அறுவடை நெற்பயிர்கள் சேதம்
சாய்ந்த நெற்பயிர்கள்
குடவாசலில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின,
குடவாசல் புதுக்குடி, கடலங்குடி, கண்டரமாணிக்கம்,சீதக்கமங்கலம், பிலாவடி ,சேங்காலிபுரம், மணப்பறவை அரசூர் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து பெய்த கனமழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இரண்டு தினங்களுக்குள் தண்ணீர் வடியாவிட்டால் நெற்பயிர்கள் முளைத்து வீணாகிவிடும். இது குறித்து சம்பந்தப்பட்ட வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை நேரில் பார்வையிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story