புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சுடுமண் சிலைகள் சேதம்

புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சுடுமண் சிலைகள் சேதம்

சேதமடைந்த பெரியசாமி சிலை 

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் உபகோயில்களான பெரியசாமி, நாககன்னி, செங்கமலையான், பொன்னுசாமி ஆகிய திருக்கோயில்களில் சுடுமண்ணால் ஆன சிலைகளை புதிதாக பிரதிஷ்டை செய்து மார்ச் 27 ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டு, வழிபட்டு வந்த வந்த நிலையில் நேற்று கோயில் காவலர் மதுபாலன் சென்று பார்த்தபோது சுடுமண்ணால் செய்யப்பட்ட ஸ்ரீ பெரியசாமி சிலைகள் சேதமாகியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து செயல் அலுவலர் அசனாம்பிகைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர் நேரில் சென்று பார்வையிட்டதில் மழையினால் பெரியசாமி கோவிலில் உள்ள.சுடுமண் சிற்பங்களில், பெரியசாமியின் முகப்பகுதியில் சிலை பெயர்ந்து சேதமடைந்துள்ளது. மேலும் அதன் அருகில் உள்ள பட்டத்து குதிரை சிலையும் விரிசல் ஏற்பட்டு பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது , மற்றும் செங்கமலையார் திருக்கோயிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட செங்கமலையார். பொன்னுசாமி, பொன்னுஞ்சடையார் சிலைகளிலும் விரிசல் ஏற்பட்டு பெயர்ந்து விழும் நிலையில் உள்ளதும். தெரியவந்தது. பல லட்சம் செலவு செய்து உருவாக்கப்பட்ட நிலையில் சிலையை உருவாக்கியவர் குறிப்பிட்ட நாளில் தருவதற்காக சிலைகளை அவசர கதியில் உருவாக்கப்பட்டதால் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் எனவும், இதுகுறித்து சிலை தயாரித்தவரிடம், கோவில் நிர்வாக அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில் சிலைகள் மீண்டும் சேதமடைந்த சம்பவத்தால் தெய்வ குத்தம் இருக்கலாம் என்று அப்பகுதி கிராம மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story