நெற்பயிர்கள் சேதம் -எஞ்சிய பயிர்களை காக்க உரம் தெளிப்பு
உரம் தெளிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி
கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூரில் 250 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. உழவு செய்யப்பட்ட வயல்களில் தெளி விதைகள் தெளிக்கப்பட்ட நிலையில் பரவலாக மழை பெய்ததால் தெளி விதைகள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. பிறகு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஓரளவு வளர்ந்த பயிர்கள் கூட கருகின. இதனால் சம்பா நெற்பயிர்கள் முழுமையாக வளரவில்லை பழையனூரில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட பல வயல்களில் நெற்பயிர்கள் வளர்ச்சி இன்றி தரிசு நிலமானது. பழையனூரில் ஒரு சில வயல்களில் ஓரளவு வளர்ந்த பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story