கனமழையால் நெற்பயிர்கள் சேதம்
சேதமடைந்த நெற்பயிர்
ராமநாதபுரம் திருவாடானை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பயிர்கள் நாசமாகி உள்ளது. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்களஞ்சியமாக திருவாடானை உள்ளது. அந்த அளவிற்கு நெல் விவசாயம் பயிரிடப்படுகிறது. மொத்தம் 26 ஆயிரத்து 680 ஹெக்டேர் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது இந்த பகுதியில் விவசாயம் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மூன்று தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் கிடைக்கின்றது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மிதப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில் நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் ஒரு பிடி நெல் கூட வீட்டுக்கு எடுத்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் செலவு செய்து வீணாகிவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வெள்ளம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை விரைந்து நடக்க வேண்டும் என விவசாய தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Next Story