பெருமாநல்லூர் கோவிலுக்கு செல்லும் சாலை சேதம்
சேதமான சாலை
பெருமாநல்லூர் கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிகுள்ளகி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், பெருமாநல்லுாரில் இருந்து மேலப்பூடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோப்பாளம்மன் கோவில். 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், தோப்பாளம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தை மாதம் மற்றும் ஆடி மாதங்களில், குடும்பத்தினருடன் வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்துகின்றனர்.
மேலும், நித்திய பூஜைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவிலுக்கு செல்லும் சாலை பராமரிப்பு குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் இந்த வழியாக மேலப்பூடி மற்றும் சொரக்காய்பேட்டை அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பக்தர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, கோவில் சாலையை சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
Next Story