கோடை மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிப்பு!

கோடை மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிப்பு!

 தூத்துக்குடியில் நேற்று பெய்த கோடை மழை காரணமாக உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் நேற்று பெய்த கோடை மழை காரணமாக உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக இருப்பது உப்பு தொழிலாகும் கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த ஆண்டு உப்பு உற்பத்தி கால தாமதமாக கடந்த பிப்ரவரி மாதமே தூங்கியது. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இதன்இடையே கோடை மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாநகரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை மழை அதிக அளவு பெய்தது சுமார் 2 மணி நேரத்தில் 59.3 மில்லி மீட்டர் மழை பெய்தது இதன் காரணமாக உட்பள பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது உப்பள பாத்திகளில் இருந்து மழை நீரை வெளியேற்றி உப்பு உற்பத்தி செய்ய இன்னும் 15 தினங்கள் ஆகும் என்று தெரிவித்த உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி குறைவாகவே காணப்படும் என்றனர் இதன் காரணமாக சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story