திருவாலங்காடு கோவில் தேர்மண்டபம் சேதம்
தேர் மண்டபம் சேதம்
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர், கமலத்தேர் என அழைக்கபடுகிறது. இந்த தேரை பாதுகாப்பாக நிறுத்த காவல் நிலையம் அருகே, 1916ம் ஆண்டு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில், தற்போது கூரை விரிசல் அடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. பங்குனி உத்திர விழாவில் தேர் உலா வரும். அடுத்த மாதம் விழா துவங்க உள்ள நிலையில் தேர் மண்டபத்தின் கூரை பகுதி உடைந்து விழும் நிலையில் உள்ளது உள்ளூர்வாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழும் முன் சீரமைக்க, திருத்தணி கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.