திருத்தணியில் சேதம் அடைந்த கால்வாய்
திருத்தணியில் சேதம் அடைந்த கால்வாயை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருத்தணி ஒன்றியம் சீனிவாசபுரம் பஜனை கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக,. மினிடேங்க் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி மக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்யப் படுகிறது. இந்நிலையில் மினிடேங்க் வைக்கப்பட்ட பகுதியில் கால்வாய் சேதம் அடைந்துள்ளன. மேலும் அங்குள்ள பள்ளத்தால் பெண்கள் குடிநீர் பிடிப்பதற்கு கடும் சிரமப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டி இருக்கும் இடம் மற்றும் பழுதடைந்த கால்வாயை சீரமைத்து தர வேண்டும்.
Tags
Next Story