ஒரே வாரத்தில் சேதமடைந்த சிமென்ட் சிலாப்
சேதமடைந்த சிமென்ட் சிலாப்
சாலை ஓரம் சிமெண்ட் பிளாக் அமைக்கப்பட்டு ஒரே வாரத்தில் சேதம் அடைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
காஞ்சிபுரத்தில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் மாட வீதியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்க, மூன்று மாதங்களுக்கு முன், மாநகராட்சி சார்பில், சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. சீரமைப்பு பணி முடிந்தும் பள்ளத்தை மூடவில்லை. இதனால், இச்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குவது தொடர்ந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மாநகராட்சி சார்பில், 10 நாட்களுக்கு முன், பள்ளத்தின் மீது சிமென்ட் சிலாப் போட்டு மூடப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்குமுன், அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிமென்ட் சிலாப்பின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. தரமற்ற சிமென்ட் சிலாப் போடப்பட்டதால்தான், ஒரே வாரத்தில் சிலாப் உடைந்துள்ளது. இதனால், கம்பிகள் நீட்டிக்கொண்டு வெளியே தெரிவதால், சாலையோரம் செல்லும் பாதசாரிகள் கம்பியில் இடித்துக்கொண்டு காயமடையும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த சிமென்ட் சிலாப்பை அகற்றிவிட்டு, தரமான சிலாப் வாயிலாக பள்ளத்தை மூட வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்."
Next Story