சேதமடைந்த குடிநீர் குழாய்கள் - விடிய,விடிய சரி செய்யும் பணி
குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய இரு தினங்களில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நீரில் மூழ்கியது. மேலும் காற்றாற்று வெள்ளம் காரணமாக குடியிருப்பு பகுதியில் மற்றும் பல்வேறு மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள், பெரிதும் சேதம் அடைந்தது.
குறிப்பாக தூத்துக்குடியில் கன மழையில் வ உ சி துறைமுக அலுவலகம் அருகே இரண்டு பாலங்கள் கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்திற்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் முதல் பாலம் தெர்மல் கேம் 2 அருகில் சுடலைமாடன் கோவில் அருகிலும் , மற்றொரு பாலம் துறைமுக திருமண மண்டபம் அருகில் உள்ளது இந்தப் பாலத்தின் கீழ்புறம் வழியாக செல்லக்கூடிய குடிநீர் குழாய்கள் காட்டாற்று வெள்ளத்தில் உடைத்து இழுத்துச் செல்லப்பட்டது.
இதனால் தெர்மல் குடியிருப்பு மற்றும் துறைமுக குடியிருப்பு, துறைமுகம் என 1000 வீடுகள் மற்றும் துறைமுகத்திற்கு தேவையான குடி தண்ணீர் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இரவு பகலாக பணியை விரைந்து முடிக்க தலைமை பொறியாளர் ரவிக்குமார் தலைமையில் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.