சேதமடைந்த மின்விளக்கு கோபுரம் - சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
தர்மபுரி நல்லம்பள்ளி வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலையில் மின் விளக்கு கோபுரம் பழுதடைந்து சாய்ந்து சாலையில் விழுந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி வட்டம் தர்மபுரியில் இருந்து நல்லம்பள்ளி வழியாக சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் இணைப்பு சாலை அமைந்துள்ளது. நல்லம்பள்ளி அருகே சேஷம்பட்டி பகுதியில் அமைந்துள்ள இந்த சாலையில் நேற்று பழுதடைந்த மின்விளக்கு கோபுரம் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இன்று காலை 6 மணி வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Next Story