சேதமடைந்த ஒரகடம் மேம்பால சாலை - விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சேதமடைந்த ஒரகடம் மேம்பால சாலை - விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

குண்டும் குழியுமாக காணப்படும் சாலை 

ஒரகடம் மேம்பால சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலுார் -- வாலாஜபாத் சாலைகள் இணையும் நான்குசாலை சந்திப்பில் ஒரகடம் மேம்பாலம் உள்ளது. மேம்பாலம் வழியாக, காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில், மேம்பாலத்தின் பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. மேம்பாலத்தின் சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாகவும், ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால், மேம்பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மேம்பாலத்தின் மீதுள்ள சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்."

Tags

Next Story