சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் : கனிமொழி எம்.பி., உறுதி

சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் : கனிமொழி எம்.பி., உறுதி

ஆய்வு

பரமன்குறிச்சி பகுதியில் வெள்ளநீரை அகற்றும் பணி நிறைவடைந்ததும் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி அளித்தாா்.
அண்மையில் பெய்த கனமழையால் சடையனேரி குளம் உடைந்து அதிகளவு நீரானது கிராமங்களுக்குள் புகுந்தது. இதில் பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை கிராமத்தை வெள்ளநீா் சூழ்ந்ததால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனா். உடன்குடி-பரமன்குறிச்சி சாலையை வெள்ளநீா் மூழ்கடித்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் விளை நிலங்களும் நீரில் முழ்கின.இப்பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை ராட்சத பம்புகள் மூலம் அகற்றும் பணி கடந்த 7 நாள்களாக நடைபெற்று வருகிறது. பரமன்குறிச்சி கஸ்பா பகுதியில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தினரும், வட்டன்விளை பகுதியில் கடலூா் மாவட்டம் ஆலத்தியூா் ராம்கோ நிறுவத்தினரும் நீா் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பணிகளை கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்

Tags

Next Story