டைம்கீப்பர் அலுவலகத்தில் சேதமடைந்த கூரை

டைம்கீப்பர் அலுவலகத்தில் சேதமடைந்த கூரை
X


காஞ்சிபுரம் பேருந்து நிலைய டைம்கீப்பர் அலுவலகத்தின் கூரையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும்படி, ஆபத்தான நிலையில் உள்ளன.


காஞ்சிபுரம் பேருந்து நிலைய டைம்கீப்பர் அலுவலகத்தின் கூரையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும்படி, ஆபத்தான நிலையில் உள்ளன.
காஞ்சிபுரம் பேருந்து நிலைய நிழற்கூரையின் ஒரு பகுதியில், காஞ்சிபுரத்தில் இருந்து, தாம்பரம் வரை இயக்கப்படும் தடம் எண் 79 அரசு பேருந்துக்கான, நேர காப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் பேருந்து நடத்துனர், டிரைவர் என, நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த அலுவலகத்தின் கூரையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும்படி, ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும், சில இடங்களில், வர்ணம் பூச்சு உதிர்ந்து, சிமென்ட் காரை உதிரும் நிலையில் உள்ளது. இதனால், இங்கு வந்து செல்லும் போக்குவரத்து ஊழியர்களும், நேர காப்பாளரும் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்துள்ள பகுதியை சீரமைப்பதோடு, கூரையின் உறுதித்தன்மையை மாநகராட்சி பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது."

Tags

Next Story