திருச்செங்கோட்டில் சிதிலமடைந்த கடைகள் அகற்றம்- கோவில் நிர்வாகம் நடவடிக்கை

திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டது.
திருச்செங்கோடு பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் சிதிலடைந்த நான்கு கடைகள் அகற்றப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நான்கு கடைகளுக்கு வாடகைதாரர்கள் வராததால் அக் கடைகள் சிதிலமடைந்து மிகவும் மோசமாக காணப்பட்டன. மேலும் அக் கடைகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அக்கடைகள் அகற்றப்பட்டன. கோயில் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மதில்சுவர் கட்டப்பட்டன. இதற்கான ஏற்பாட்டினை கோயில் உதவி ஆணையர் செயல் அலுவலர் மு. இரமணிகாந்தன், அறங்காவலர் குழுத் தலைவர் செ. தங்கமுத்து, அறங்காவ லர்கள் செ.ர. கார்த்திகேயன், பி.அர்ஜுனன், மோ. அ ருணா சங்கர், டி.சி. பிரபாகரன் ஆகியோர் செய்தனர்.

Tags

Next Story