திறனாய்வு தேர்வில் தம்மம்பட்டி பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

திறனாய்வு தேர்வில் தம்மம்பட்டி பள்ளி மாணவர்கள்  தேர்ச்சி
திறனாய்வு தேர்வில் தம்மம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மாநில அளவில் முதலமைச்சரின் திறனாய்வு தேர்வும்,அதனையடுத்து தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வும் ஒரு மாதத்திற்கு முன் நடந்தது. இதில் 11ம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ராஜஸ்ரீ என்ற மாணவி, தமிழ் இலக்கியத்திறனாய்வு தேர்வில் தேர்வாகியுள்ளார்.

இதன் மூலம் அவருக்கு 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் 24 மாத காலத்திற்கு மாதம்தோறும் ₹1500 வீதம் மொத்தம் ₹36 ஆயிரம் கல்வி ஊக்க தொகையாக அவரது வங்கிக்கணக்கில் வைக்கப்படும்.

அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் லோகேஸ்வரன் என்ற மாணவர், முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் தேர்வாகியுள்ளார். இதன் மூலம் அவருக்கு 11, 12ம் வகுப்பு பயிலும் இருவருடமும், அதன்பிறகு ஒரு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மூன்றாண்டு காலத்திற்கும் என மொத்தம் 5 வருடங்களுக்கு, ₹10ஆயிரம் வீதம் மொத்தம் ₹50ஆயிரம் ஊக்கத்தொகையாக அவரது வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். மாணவர்களை பள்ளியின்தலைமையாசிரியர் மதிவாணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags

Next Story