தடுப்பணைகள், அணைக்கட்டு புனரமைக்கும் பணிகள்; ஆட்சியர் ஆய்வு

சேந்தமங்கலம் அருகே தடுப்பணைகள், அணைக்கட்டு புனரமைக்கும் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், நடுகோம்பை, வாழவந்திகோம்பை ஆகிய பகுதிகளில் உள்ள கரைபோட்டனாறு உப வடிநிலத்தில் உள்ள பெரிய அணைக்கட்டு புனரமைப்பு பணிகள், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, பிள்ளாநல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் ஆகியவற்றை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டம், நடுக்கோம்பை கிராமம், கரைபோட்டனாறு ஆற்றின் வலது கரையில் 90 மீட்டர் நீளத்திற்கு ரூ.8.90 இலட்சம் மதிப்பீட்டில் காப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளதையும், மேலும், ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளதையும், சேந்தமங்கலம் வட்டம், வாழவந்திகோம்பை கிராமத்தில் கோரையாற்றின் இடது கரையில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் வெள்ள பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டுள்ளதையும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, பார்வையிட்டு, ஆற்றின் நீர் வரத்து, பாசன வசதி பெறும் விவசாய நிலப்பரப்பளவு, விவசாயிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நீர்வள ஆதாரத்துறை பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் கோரையாற்றின் குறுக்கே நிலையான நீர் பாதுகாப்பு பணி திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் சுமார் 12,000 மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, சீராப்பள்ளி பேரூராட்சியில் வார்டு எண் 15 ஒடுவன்குறிச்சி கிழக்கு காட்டுகொட்டாய் பகுதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் அறியாகவுண்டம்பட்டி ஏரி முதல் ஒடுவன்குறிச்சி ஏரிக்கு செல்லும் நீர்வழி பாதையில் அருகில் உள்ள 5 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஊற்று செழிக்கும் வகையில் 3.10 * 7.2 மீட்டர் நீளத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதையும், பிள்ளாநல்லூர் பேரூராட்சி, அலவாய் மலை பகுதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பிள்ளாநல்லூர் புதூர் அருகில் உள்ள 6 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் ஊற்று செழிக்கும் வகையில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதையும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உதவி செயற்பொறியாளர் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் இரா.அன்புச்செல்வன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story