தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டிய நாடகம் 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டிய நாடகம் 
தலைமை உரையாற்றிய துணைவேந்தர்  வி.திருவள்ளுவன் 
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் லண்டன் மாணவர்கள் பங்கேற்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையும், லண்டன் நர்த்தன கலாலயம் மற்றும் லண்டன் தமிழவை இணைந்து, 'சிவகங்கை செந்தீ' என்னும் நாட்டிய நாடகத்தை தமிழ்ப் பல்கலைக்கழக கரிகாற்சோழன் கலையரங்கில் நடத்தினர். இந்நிகழ்வில், நாடகத்துறைத் தலைவர் முனைவர்.செ.கற்பகம் வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார்.

அவர் பேசுகையில், "தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக, தமிழ்ப் பண்பாட்டு மரபுக் கலைகள் காக்கப்பட்டு இசை, சிற்பம், நாடகத்துறையின் வாயிலாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழர் தம் வாழ்வியல் கலையை பாதுகாக்கும் நோக்கோடு, தமிழக சுதந்திரத்திற்கு கடமையாற்றிய வேலு நாச்சியாரின் வரலாறு இவ்வரங்கில் நாட்டிய நாடகமாக்கப்பட உள்ளது. இதனை மாணவர்கள் அறிந்து தமிழர் தம் சுதந்திர பிண்ணனியை அறிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

இந்நிகழ்வில் மருதுபாண்டியர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜயா, தமிழ்ப் பல்கலைக்கழக் கலைப்புலத் தலைவர் முனைவர். பெ.இளையாப்பிள்ளை வாழ்த்திப் பேசினர். இதனைத்தொடர்ந்து லண்டன் நர்த்தன கலாலயத்தின் சார்பில் “சிவகங்கை செந்தீ” எனும் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இதில், லண்டனில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் 30 மாணவிகள் பங்கேற்றனர். உயிரூட்டமான முகத்தோற்றத்துடன், வீரமும் வேட்கையும் கொண்ட வீர மங்கைகளான வேலுநாச்சியாரையும், குயிலியையும் கண்முன்னே நடமாட வைத்து சிவகங்கை சீமைக்கே அழைத்து சென்றதுடன், மருது சகோதரர்களின் கர்ஜனையை செவிகளில் ஒலிக்கச் செய்தனர். நிறைவாக, லண்டன் தமிழவை காப்பாளர் புலவர். நல்லதம்பி சிவநாதன் நன்றி கூறினார். இணைப்புரையை முனைவர். ஏ.வெங்கடேசன், ப.ரூபவதி வழங்கினர்.

Tags

Next Story