இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் ஆபத்து

இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் ஆபத்து

சுற்றித்திரியும் மாடுகள்


இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் இரவு நேரத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாடுகள் ஆங்காங்கே உலாவுகின்றன. மாடு வளர்ப்போர் அதனை கண்டுகொள்வதில்லை‌. சாலைகளில் பெரும்பாலான இடங்களில் மின் விளக்குகள் எரியவில்லை. இருள் சூழந்த பகுதியில் நிற்கும் மாடுகள் தெரியாமல், வாகன ஓட்டிகள் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். வாகனங்களில் அடிபட்டு கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவமும் நடக்கிறது.

குறிப்பாக இரவு நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் படுத்து கொண்டு மாடுகள் வழிவிடாததால் நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து மானாமதுரை காவல்துறையினர் கால்நடை வளர்ப்போருக்கு எச்சரிக்கை விடுத்தும், கண்டுகொள்வதில்லை.

இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கால்நடை வளர்ப்போரிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதையும் மீறி கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடுவோருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Tags

Next Story