மருதேரி ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் அபாயம்
போச்சம்பள்ளி அருகே மருதேரி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதனை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.
போச்சம்பள்ளி அருகே மருதேரி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி கிராமத்தில் உள்ள ஏரி சுமார் 35,ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு கட்லா, ரோகு, சப்பாரை, விரால் போன்ற மீன் வகைகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏரிக்கரை ஓரங்களில் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசூவதால் அப்பகுதி மக்கள் அவதிபட்டு வருகின்றனர். மேலும் செத்து மிதக்கும் மீன்களை பறவைகள் கொத்தி சென்று அருகில் உள்ள வீடுகளின் கூரைகள் மொட்டை மாடி தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் போடுகின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி கிராமத்தின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏரியை பார்வையிட்டு, மீன்கள் வெப்பத்தால் செத்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களும் மற்றும் சமுகஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story