நான்கு வழிச்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஆபத்து

நான்கு வழிச்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் ஆபத்து

மானாமதுரையில் 4 வழிச்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மானாமதுரையில் 4 வழிச்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மானாமதுரை நான்கு வழிச்சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. நான்கு வழிச்சாலையில் வழி விடு முருகன் கோயில் பகுதியிலிருந்து அண்ணாதுரை சிலை பைபாஸ் பஸ் ஸ்டாப் வரை உள்ள பகுதியில் சென்டர் மீடியனில் வளர்ந்துள்ள புற்களை மேய்வதற்காக ஏராளமான மாடுகள் வருகின்றன.

வேகமாக வரும் வாகனங்கள் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் உள்ளது. நான்கு வழிச்சாலை நிர்வாகத்தினர் மானாமதுரை நகர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story