ஆபத்தாக சாலையை கடக்கும் கல் குவாரி லாரிகளால் ஆபத்து

ஆபத்தாக சாலையை கடக்கும் கல் குவாரி லாரிகளால் ஆபத்து
ஆபத்தாக சாலையை கடக்கும் கல் குவாரி லாரிகளால் ஆபத்து
ஆபத்தாக சாலையை கடக்கும் கல் குவாரி லாரிகளால் ஆபத்து ஏற்பட் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பிரதான சாலையான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

இதில், செங்கல்பட்டு மாவட்டம்,சிலாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள கல் குவாரியில் இருந்து, ஜல்லிக்கற்களை ஏற்றி வரும் லாரிகள், சிலாவட்டம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் தடை செய்யப்பட்ட சாலை வளைவில் உள்ள கற்களை அப்புறப்படுத்திவிட்டு கடந்து செல்கின்றன.

இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இப்பகுதியில், மீண்டும் கற்களை கொண்டு தடை ஏற்படுத்த வேண்டும்.

தவறான வழியில் சாலையை பயன்படுத்தும் லாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். நிரந்தர தீர்வாக, சிமென்ட் கான்கிரீட்டால் தடுப்பு அமைத்து, இப்பகுதியில் சாலையை கடக்க முழுமையாக தடை விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story