கோட்டகுப்பம் அருகே கடல் சீற்றத்தில் ஆபத்தான குளியல்

கோட்டகுப்பம் அருகே கடல் சீற்றத்தில் ஆபத்தான குளியல்

பொம்மையார்பாளையம் கடற்கரை

பொம்மையார்பாளையம் கடற்கரையில் கடல் சீற்றத்தின் ஆபத்தை பொருட்படுத்தாமல் மக்கள் குளித்து மகிழ்ந்தனர். இப்பகுதியில் போதிய போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் இ.சி.ஆர்.,சாலை, கோட்டக்குப்பம் அடுத்த ஆரோவில் பீச், பொம்மையார்பாளையம் பீச், ஆகிய பகுதிகளில் தினந்தோரும் நுாற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயனிகள் வருகின்றனர். மேலும் விடுமுறை தினமான சனி, ஞயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் மக்கள் கூட்டம் கானப்படும். இது போன்ற நாட்களில் அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடுவது வழக்கம்.

ஆரோவில் கடற்கரை ஆக்கிரமிப்பு மற்றும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் சுற்றுலா பயனிகள் அதிகளவில் வருவது இல்லை. இதனால் இந்நிலையில் தொடர் விடுமுறை என்பதால் நேற்றுமுன்தினம் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொம்மையார்பாளையம் பீச்சில் உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாபயனிகளின் வருகை அதிகரித்தது. மேலும் கடல் அலையின் சீற்றமும் அதிகரித்து காணப்பட்டது. கடல் சீற்றத்தின் ஆபத்தை பொருட்படுத்தாமல் மக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

அந்த பகுதியில் துாண்டில் முள்வலைவுக்காக கொட்டப்பட்டுள்ள பாறைகளில் சிலர் அமர்ந்து மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூரை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த பகுதியில் நேற்று போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றத்தின் போது கடலில் குளித்த பல பேர்கள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.இது போன்ற நேரங்களில் வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து குளிப்பதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்க வேண்டும். ஆனால் பெயரளவில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வந்து சென்றனர்.

Tags

Next Story