சாலவாக்கம் சாலையில் ஆபத்தான வளைவுகள்

சாலவாக்கம் சாலையில் ஆபத்தான வளைவுகள்

ஆபத்தான வளைவு

சாலவாக்கம் சாலையில் ஆபத்தான வளைவுகள் இருப்பதால் விபத்து நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் இருந்து, பொற்பந்தல் வழியாக சாலவாக்கம் செல்லும், 18 கி.மீ., தூரம் கொண்ட சாலை உள்ளது. சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர், இருசக்கர வாகனங்கள் வாயிலாக இச்சாலை வழியாக சாலவாக்கம் சென்று,

அங்கிருந்து உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இச்சாலையில், பொற்பந்தல், எடமச்சி, கிடங்கரை, சாலவாக்கம் ஆகிய பகுதிகளில், அபாயகரமான வளைவுகள் உள்ளன. குறிப்பாக கிடங்கரை- கணபதிபுரம் சாலை இடையே, அடுத்தடுத்து மூன்று இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன. இந்த வளைவு பகுதிகளில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

எனவே, இச்சாலையில் உள்ள வளைவு பகுதிகளில், எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேகத்தடை அமைத்து விபத்துகள் எற்படாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story