ஆபத்தான கட்டண கழிப்பிடம் - சீரமைக்க பயணிகள் கோரிக்கை

பொன்னமராவதி பஸ் நிலையம்

பொன்னமராவதி பஸ் நிலைய கட்டண கழிப்பிடத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடம் இயங்கி வருகிறது. இதன் மேற்கூரையில் சிமென்ட் காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருகிறது. மேலும், முறையாக பராமரிக்காத துருநாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் கட்டண கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகி்ன்றனர். கட்டண கழிப்பிடத்தை சீரமைக்கவும், சுகதாரமாக பராமரிக்கவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story


