தாழ்வாக உள்ள மின் வயர்களால் ஆபத்தான வாகன பயணம்

X
ஆபத்தான பயணம்
தூத்துக்குடி அருகே சாலையில் தாழ்வாக உள்ள மின்சார கம்பிகளை மாற்றி உயரமாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் அருகே, செந்நெல்பட்டி செல்லும் சாலையில் பரும்படி சுடலைமாடசாமி கோவில் பின்புறம் மிகவும் தாழ்வாக மின்சார கம்பி உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பேருந்து மற்றும் லாரிகள் மிகுந்த கவனத்துடனும் அச்சத்தோடும் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே சம்மந்தபட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக இந்த மின்சார கம்பியை சற்று உயரமாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசவப்பபுரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மு.கணேசன், மின்சார வாரிய இளநிலை பொறியாளருக்கு விடுத்துள்ளார்.
Tags
Next Story
