முத்துமலை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம்

ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் முத்துமாலை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்து, அன்னதானம் வழங்கினார்.

சேலம் மாவட்டம். ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூரில் முத்துமலை முருகன் கோவில் உள்ளது.இக்கோவிலில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருவறையில் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் முத்துமலை முருகனை தரிசனம் செய்தார்.தொடர்ந்து வேலுடன் சன்னதியை சுற்றி வந்தார். அதன் பின்னர் 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை உள் பகுதியில் மார்பு அமைந்துள்ள தியான மைய இடத்தில் அமர்ந்து 10 நிமிடம் தியானம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டதும் அங்கிருந்த பக்தர்கள் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story