டாஸ்மாக் பார் ஊழியருக்கு கத்திக்குத்து : வாலிபர் கைது.

டாஸ்மாக் பார் ஊழியருக்கு கத்திக்குத்து : வாலிபர் கைது.

கோப்பு படம் 

தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்து நகர் டி.சவேரியார் புரத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மகன் அந்தோணி ஜேம்ஸ் (37). இவர் தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு 5வது தெருவில் உள்ள டாஸ்மார்க் பாரில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மாலையில் இவர் வேலை செய்து கொண்டிருந்தபோது பிரையன்ட் நகர் 9வது தெருவை சேர்ந்த முருகேசன் மகன் இசக்கிமுத்து (20) என்பவர் ஓசியில் மது கேட்டு தகராறு செய்தாராம்.

அதற்கு அந்தோணி பிரான்சிஸ் மறுக்கவே தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினாராம். இதில் படுகாயம் அடைந்த அந்தோணி ஜேம்ஸ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் வழக்குப் பதிந்து, இசக்கி முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story