அப்பாவை கொலை செய்ததாக தங்கை கணவர் மீது மகள் போலீசில் புகார்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அப்பாவை கொலை செய்ததாக தங்கை கணவர் மீது மகள் போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சானார்பாளையம் பகுதியில் வசிப்பவர் ரவி, 55. சலவைத்தொழிலாளி. இவர் நேற்று காலை 06:30மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, தனியார் பள்ளி பின்புறம் மண் மேட்டில், கழுத்து நெரிக்கப்பட்ட தடயம், பற்களால் கடித காயத்துடன் இறந்து கிடந்தார். இது குறித்து பொதுமக்கள் புகார் செய்ய, நேரில் சென்ற குமாரபாளையம் போலீசார், பிரேதத்தை கைப்பற்றினர். போலீசார் விசாரனையில், ரவியின் தங்கை வசந்தி என்பதும், இவரது கணவர் பூபதி என்பவருக்கு, வசந்தி மகளிர் குழுவில் கடன் வாங்கி கொடுத்ததாகவும், அதன் பின் பூபதி வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வசந்தி, தன் கணவர் பூபதியை பிரிந்து, தன் மூத்த சகோதரி மைதிலி, 33, உடன் வசித்து வந்ததாகவும், மைதிலியின் வீட்டிற்கு அடிக்கடி பூபதி சென்று வசந்தியை வரச் சொல்லியும், அனுப்பி வைக்க சொன்னதாகவும், இதற்கு ரவி பலமுறை திட்டி விட்டதாகவும், இதனால் ரவிக்கும், பூபதிக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பூபதி, தன் அப்பா ரவியை கொலை செய்து விடுவதாக பலமுறை மிரட்டியுள்ளதாகவும், நேற்றுமுன்தினம் இரவு தன் அப்பா ரவி, பூபதி மற்றும் பூபதியின் நண்பர்கள் ஆகியோர் குமாரபாளையம் புறவழிச்சாலை அருகே உள்ள தனியார் பள்ளி பின்புறம் மது குடித்துக்கொண்டு இருந்ததாகவும், பூபதி மற்றும் அவரது நண்பர்கள்தான், தன் அப்பா ரவியை கொலை செய்திருக்க வேண்டும் எனவும், பூபதியின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளதாகவும் மைதிலி கூறியுள்ளார். ஆகவே தன் அப்பா ரவியை கொலை செய்த பூபதி மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, மைதிலி குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
Next Story