தாய் வீட்டிற்கு வந்த மகள் தூக்கிட்டு தற்கொலை - காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை

தாய் வீட்டிற்கு வந்த மகள் தூக்கிட்டு தற்கொலை - காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை

விசாரணை

விருதுநகர் வி எம் சி காலனியில் தாய் வீட்டிற்கு வந்த மகள் தூக்கிட்டு தற்கொலை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலை வி எம் சி காலனி சார்ந்தவர் முத்துலட்சுமி வயது 23 . முத்துலட்சுமி கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பயின்ற போது அதே மாவட்டத்தைச் சார்ந்த முத்துக்குமார் என்பவரை காதலித்து வந்ததாகவும் இரு வீட்டார் சம்மத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முத்து லட்சுமியும் முத்துக்குமாரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது தற்போது ஏழு வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் முத்துலட்சுமி விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விடுப்பில் இருக்கும் காரணத்தினால் தூத்துக்குடியில் தனது கணவர் முத்துக்குமார் வீட்டில் இருந்ததாகவும் கடந்த 23ஆம் தேதி இரவு 7 மணி அளவில் முத்துலட்சுமி மற்றும் முத்துலட்சுமியின் கணவர் முத்துக்குமார் 7 மாத குழந்தையுடன் விருதுநகர் உள்ள முத்துலட்சுமியின் தந்தை முருகேசன் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதை அடுத்து மனைவியை அங்கு விட்டு விட்டு முத்துக்குமார் மட்டும் தூத்துக்குடி சென்றதாகவும் கூறப்படுகிறது தொடர்ந்து முத்துலட்சுமி தனது குழந்தையை தன் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு குளித்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது ரூமுக்குள் முத்துலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது அவரை அங்கிருந்து விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முத்துலட்சுமியின் குடும்பத்தினர் கொண்டு சென்ற பொழுது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் முத்துலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதே உறுதி செய்துள்ளனர். முத்துலட்சுமியின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story