மாமியார் சந்தேகப்பட்டதால் மருமகள் தூக்கிட்டு தற்கொலை

ஓசூர், ராஜகணபதி நகரில் பணம் எடுத்ததாக மாமியார் சந்தேகப்பட்டதால், விரக்தியில் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட ராஜ கணபதி நகர் 2வது கிராசில் குடும்பத்துடன் வசிப்பவர் இளவரசன், அவர் மனைவி சினேகா இவர்களின் சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பட்டார அள்ளியைவிட்டு ஒசூர் ராஜ கணபதி நகரில் தந்தை தாயுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர், பழ வியாபாரியான இளவரசன் இன்று காலை வியாபாரத்துக்கு சென்று மதியம் 2 மணி அளவில் பழம் வியாபாரம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் இந்த நிலையில்தனது தாய் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வெளியே அமர்ந்து இருந்தனர் கதவு தாளிடப்பட்டிருந்தது.

கதவைத் தட்டிய இளவரசன் திறக்க முடியாததால் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இளவரசனின் மனைவி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார், அவரை மீட்டு பரிசோதனை செய்தபோது அவர் உயிர் பிரிந்து இருந்ததுசம்பவம் குறித்து ஓசூர் மாநகரா போலீசாருக்குதகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் நான்கு வருடங்களுக்கு முன்பு இளவரசனும் சினேகாவும் காதல் திருமணம் செய்துள்ளனர், அவர்கள் இருவருக்கும் மெகா ஸ்ரீ என்ற மகளும் சர்வேஸ்வரன் என்ற மகன் என இரண்டு குழந்தைகள் இருப்பதும் கடந்த ஒரு வாரம் முன்பு மாமியார் லட்சுமி 2000 ரூபாய் பணம் காணவில்லை என்று பணத்தை யார் எடுத்தார்கள் என்று குடும்பத்தில் உள்ள அனைவரையும் கேட்டுள்ளார்.

அதற்கு சினேகா என் மீது நீங்கள் ஏன் சந்தேகப்படலாம் என்று கேட்டு கடந்த ஒரு வாரமாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார், இந்நிலையில் அவரது கணவர் இன்று பழக்கடைக்கு சென்று வந்த இடைப்பட்ட நேரத்தில் உள்பக்கமாக தாளிட்டுதற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது சம்பவம் குறித்து ஓசூர் மாநகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் எடுத்ததாக மாமியார் சந்தேகப்பட்டதால் ஆத்திரம் அடைந்த மருமகள் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

Tags

Next Story