பணத்திற்காக அடித்து உதைத்த மகள்கள். - தாய் எஸ்.பியிடம் புகார்

பணத்திற்காக அடித்து உதைத்த மகள்கள். - தாய் எஸ்.பியிடம்   புகார்

வித்யா

திருவண்ணாமலையில் மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி வித்யா. இந்நிலையில் வித்யா இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பின்னர்செய்தியாளர்களிடம் கூறியது : எனக்கு சுசித்ரா,சரண்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தீபாவளி ஆடை கேட்டு என்னை அடித்து அவமானப்படுத்தி விட்டார்கள். இது மற்றும் இல்லாமல் பலமுறை ஏதாவது ஒரு காரணத்தினால் என்னை அடித்துள்ளார்கள். ஏற்கனவே அதன் அடிப்படையில் நான் கடலாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். நான் புகார் அளித்ததால் என் மகள்கள் திருவண்ணாமலை மாவட்ட எஸ் பி அலுவலகத்திற்கு முன் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார்கள் என் அம்மா யாருடனோ தவறாக உறவில் இருக்கிறார்கள் என்றும், எங்களையும் அதற்கு கட்டாயப்படுத்துகிறார்கள் என்று பொய் புகார் அளித்துள்ளனர். எனவே நான் இன்று திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளேன். மேலும் ஏற்கனவே கலெக்டரிடம் கணவன் இழந்து நிற்கும் எனக்கு கருணையின் அடிப்படையில் அரசு சலுகைகள் வழங்க கோரி மனு கொடுத்து இருக்கிறேன். மனுவின் அடிப்படையில் கணவர் இறந்ததற்காக எனக்கு மாத உதவித் தொகையும் மற்றும் இலவச வீடு கட்டி கொடுத்தனர். அவற்றையெல்லாம் எனது கூடப்பிறந்த தம்பி மற்றும் எனது உறவினர்கள் அபகரித்து எனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டார். நான் அதைக் கேட்டதற்கு என்னை அடித்து வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டார்கள் .மூன்று வருடமாக என்னையும் என் பிள்ளைகளையும் பிரித்து விட்டார்கள். உன் அம்மா நடவடிக்கை சரியில்லை உங்களையும் தவறான வழியில் கொண்டு போய் விடுவாள் என்று சொல்லி எனது பிள்ளைகளை தூண்டுதலின் பெயரில் மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் பொய் புகார் கொடுத்துள்ளனர். எனவே காவல் துறையினர் உண்மை தன்மை அடிப்படையில் இந்த புகாரினை விசாரிக்க வேண்டும். மற்றும் எனது கணவர் இறந்து போன இன்சூரன்ஸ் தொகையினை எங்களுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஆனாலும் அது இன்னும் எங்களது கைக்கு வரவில்லை. இந்த பணத்தையும் என்னிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த பொய் புகார் அளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story